எபி-ஜெனெடிக்ஸ் என்ற உண்மை: உங்கள் பிள்ளைகள் எப்படி நீங்கள் விரும்பிச் சாப்பிட்ட உணவையே விரும்புகிறார்கள்?

"தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை", "அப்பனுக்கு தப்பாம பிறந்து இருக்காய்" என்று நம் ஊரில் சொல்வது வெறும் பேச்சு அல்ல; அதன் பின்னால் ஒரு மாபெரும் அறிவியல் உண்மை ஒளிந்திருக்கிறது. 2026-ல் விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ள ஒரு உண்மை என்னவென்றால், நீங்கள் பல ஆண்டுகளாக விரும்பி உண்ணும் ஒரு உணவை, உங்கள் பிள்ளைக்கு முதல்முறை கொடுக்கும்போது அது அவர்களுக்கு உடனே பிடித்துப்போகும். எல்லா நேரங்களிலும் இல்லாவிட்டாலும், பல சமயங்களில் இது நடக்கிறது. உங்கள் மூளை அந்த உணவைச் சுவைக்கும்போது அடைந்த திருப்தியின் பதிவு, உங்கள் சந்ததிக்கும் கடத்தப்படுவதுதான் இதன் பின்னணியில் உள்ள ரகசியம்.

இன்னொரு அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், ஒரு தாய் ஒரு குறிப்பிட்ட தெருவில் செல்லும்போது ஒரு வாசனையை உணர்ந்து பயப்படுகிறார் என்று வைத்துக்கொள்வோம். சில ஆண்டுகள் கழித்துப் பிறக்கும் அந்தத் தாய்வழிப் பிள்ளை, வளர்ந்து அதே தெருவில் அதே வாசனையை உணரும்போது, இனம் தெரியாத ஒரு பய உணர்வுக்கு ஆளாகும். இது கதையல்ல, நிஜம். மனித உடலில் இருக்கும் DNA என்பது வெறும் உருவத்தை மட்டும் தீர்மானிக்கும் மூடிய புத்தகம் கிடையாது. அது அன்றாடம் நம் உடலில் நடக்கும் மாற்றங்களைக் குறித்துக்கொள்ளும் ஒரு 'டைரி' என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

முன்பெல்லாம் DNA என்பது மாறாத ஒன்று என்று கருதப்பட்டது. ஆனால், DNA-வில் ஏற்படும் மெத்திலேஷன் (Methylation) என்ற வேதியியல் மாற்றம், நாம் சந்திக்கும் அனுபவங்களை அதில் பதிவு செய்கிறது. உதாரணமாக, உங்களுக்குப் பிடித்த உணவை உண்ணும்போது உங்கள் மூளையில் 'டோப்பமின்' (Dopamine) என்ற மகிழ்ச்சி ஹார்மோன் சுரக்கிறது. அதேபோல் ஒரு இடத்தைப் பார்த்து பயப்படும்போது 'கார்டிசோல்' (Cortisol) போன்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன. இந்த உணர்வுகள் அனைத்தும் வேதியியல் மாற்றங்களாக மாறி, உங்கள் DNA-வின் ஒரு பகுதியில் அடையாளங்களாகப் பதிவாகின்றன.

அடிக்கடி நடக்கும் இத்தகைய பதிவுகள் உங்கள் விந்தணுக்கள் அல்லது கருமுட்டைகள் வழியாகப் பிள்ளைகளுக்கும் கடத்தப்படுகின்றன. பாடும் திறன், ஓவியம் வரையும் கலை, இசை ஞானம் போன்றவை பல நூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் ஒரு மரபணுத் தொடர்ச்சிதான். நம்முடைய பழக்க வழக்கங்களால் DNA-வில் இத்தகைய மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதுதான் 2026-ன் புதிய அறிவியல் கண்டுபிடிப்பு. நாம் நவீன வாழ்க்கைக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ளும்போது, அந்தப் புதிய பழக்கங்களும் நம் ஜீன்களில் பதிவாகி அடுத்த தலைமுறைக்கு ஒரு 'அறிவாற்றல் கையேடாக' (Manual) செல்கிறது.

இந்த மாற்றங்கள் அம்மாவிடம் இருந்து மட்டும் வருவதில்லை, அப்பாவிடம் இருந்தும் கடத்தப்படுகின்றன. "அப்பன் குடிகாரன் என்றால் மகனும் குடிகாரன் ஆவானா?" என்ற கேள்வி எழலாம். அப்படியல்ல, தந்தை ஒரு விஷயத்திற்கு அடிமையாக இருந்தால், அந்த பலவீனம் பிள்ளையின் DNA-வில் ஒரு தூண்டுதலாக இருக்கலாம். ஆனால், பிள்ளைகள் தங்கள் மனவலிமையால் அதனைத் தடுத்துவிட முடியும். பொதுவாக நம்முடைய குணாதிசயங்கள், விருப்பு வெறுப்புகள் நம் பெற்றோரைப் போலவே இருப்பதற்கு இந்த மெத்திலேஷன் முறையே முக்கியக் காரணமாகும்.

இதேபோல் உடல் ரீதியான மற்றொரு அதிசயம், பெண் உடலில் ஆண் விந்தணுக்கள் எதிர்கொள்ளும் போராட்டம். 

பொதுவாக நம் உடலில் ஏதாவது ஒரு அந்நிய கிருமி (பாக்டீரியா அல்லது வைரஸ்) நுழைந்தால், வெள்ளை அணுக்கள் அதனைத் தாக்கி அழித்துவிடும். அப்படியிருக்கையில், பல கோடி விந்தணுக்கள் பெண் உடலில் நுழையும்போது அவற்றை வெள்ளை அணுக்கள் தாக்குவதில்லையா? உண்மையில், ஆரம்பத்தில் வெள்ளை அணுக்கள் விந்தணுக்களைத் தாக்கி அழிக்கும். இதனால், தான் பலருக்கு முதல் முறை உறவிலேயே கருத்தரிப்பு நடப்பது கடினமாக இருக்கிறது.

ஆனால், மீண்டும் மீண்டும் உறவு கொள்ளும்போது, ஒரு குறிப்பிட்ட ஆணின் விந்தணுவைத் தாக்க வேண்டாம் என்ற சிக்னல் பெண்ணின் வெள்ளை அணுக்களுக்கு அனுப்பப்படுகிறது. பெண் இன்பமாக இருக்கும்போது சுரக்கும் ஹார்மோன்கள் இந்தத் தாக்குதலைக் குறைக்கின்றன. நாளடைவில் அந்தப் பெண்ணின் உடல், தன் கணவரின் விந்தணுவை ஒரு நண்பனாக ஏற்றுக்கொண்டு தாக்குதலை நிறுத்திவிடுகிறது. நம் உடல் என்பது எவ்வளவு உன்னதமான படைப்பு ?  இயற்கை அல்லது பிரபஞ்சத்தின் படைப்பாற்றல் மிகவும் புத்திசாலித்தனமானது. மனித DNA-வை மற்ற உயிரினங்களோடு ஒப்பிட்டால், அதில் உள்ள இரண்டு முக்கிய மாற்றங்கள் யாரோ ஒரு மேம்பட்ட அறிவாற்றல் கொண்டவர்களால் (Aliens or Intelligent Designer) புகுத்தப்பட்டது போன்றே இருக்கிறது என்று 2025-2026 ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

அப்படி பார்கப் போனால் கடவுள் என்ற ஒருவனே இல்லை என்று தான் கூறவேண்டும் ! அதற்குள் செல்லத் தேவை இல்லை.. ஆனால் இப்படி ஒரு மனிதனாக நாம் பிறந்து வாழ்ந்து கடைசியில் இறக்கிறோம். அந்த நாள் வரை , ஏன் சந்தோஷமாக இருக்க கூடாது ? மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருக்க கூடாது ? 

கண்ணன் பக்கங்கள்

Post a Comment

0 Comments